Description
எல்லோரும் இன்புற் றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே. இது தவத்திலே சிவம் கண்ட தாயுமானவர் வாக்கு. இதே சிந்தனை நம் எல்லோரிடத்திலும் உண்டு. ஆனால், தாயுமானவர் போல் அதை முழுமையாக கடைப்பிடிக்க முடியாமல் நாம் சூழ்நிலைக் கைதியாக வாழ்க்கையை ஓட்டுகிறோம். சந்தர்ப்ப சூழ்நிலைகள் நம்மை எங்கோ இழுத்துப் போய் விடுகிறது. ஆழ்மனம் அமைதியாக, நல்ல எண்ணங்களோடுதான் இருக்கிறது. அப்படிப்பட்ட ஆழ்மன நல்லெண்ணங்களை வெளிக்கொணர நமக்குத் தேவைப்படுவதுதான் ஆன்மிக வழிபாடு. அதனடிப்படையில் உருவான ஆயிரக்கணக்கான கோயில்களில், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் மட்டும் சுமார் 62 கோயில்கள் உள்ளன. எல்லாக் கோயில்களுமே நம் மனம் பண்பட உருவாக்கப்பட்டவைதான். ஆன போதும் மக்கள் அதிகம் சென்று வழிபடும் சில முக்கியக் கோயில்களின் வரலாற்றையும், அற்புதங்களையும் மிகச் சுருக்கமாக விவரிக்கிறது இந்தப் புத்தகம்.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.