Description
இது ரஷ்யாவின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக வரலாறு. உலகின் வல்லரசுகளில் ஒன்றாகத் தவிர்க்க முடியாத இடத்தைப் பிடித்திருக்கிறது ரஷ்யா. ஜார் மன்னர்களிடமிருந்து விடுதலை அடைந்த காலத்திலிருந்தே அவர்களது இலக்கு இதுவே. முன்னேறிய உலக நாடுகளுக்கு முன், தாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதை கம்யூனிசத்தின் வழியே நிரூபிக்கப் போராடினார்கள்.
ஆட்சிப் பொறுப்பேற்ற ஒவ்வொரு அதிபரும் இதையே முயற்சி செய்தனர். ஆனால் வெவ்வேறு வழிகளில் செய்தனர். இவற்றின் வெற்றி தோல்விகள் அவ்வப்போது மக்கள் புரட்சியில் முடிந்தது. மக்கள் அதிருப்தியில் வாழ்ந்தாலும் தங்கள் இலக்கை விட்டுக்கொடுக்கவில்லை. நாட்டை மேம்படுத்த அதிபரும், மக்களுமாக மேற்கொண்ட பயணமே இந்தப் புத்தகம்.
அமெரிக்காவின் செயல்களை எதிர்க்கும் துணிச்சல் கொண்ட முக்கிய நாடுகளில் ஒன்று ரஷ்யா. அத்தகைய வலிமையை அவர்களாகவே வளர்த்துக் கொண்டவர்கள். உக்ரைன் மீது போர் தொடுத்திருக்கும் ரஷ்யாவின் பின்னணியை அறிந்துகொள்ளும் ஆர்வத்தில் உருவான புத்தகம் இது. ஜனநாயகத்தை மட்டுமே பரவலாக அறிந்திருக்கிற தலைமுறைக்கு, கம்யூனிச, சர்வாதிகார ஆட்சிகளை இது அறிமுகப்படுத்தும்.
மெட்ராஸ் பேப்பர் இணைய வார இதழில் இது தொடராக வெளிவந்து, தற்போது புத்தகமாகியிருக்கிறது.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.