தேர்தல் தமிழ்
தமிழின் அழகு அரசியல் உலகத்திலும்
₹130 ₹124
- Author: என் சொக்கன்
- Category: அரசியல்
- Sub Category: கட்டுரை
- Publisher: ஸீரோ டிகிரி பப்ளிஷிங்
Additional Information
- Edition: 1st (First)
- Year Published: 2022
- Binding: Paperback
- Language: தமிழ்
Description
தமிழர்களுக்குத் தேர்தல் என்றால் தனி மகிழ்ச்சி. உள்ளாட்சி அமைப்புகளுக்கோ சட்டமன்றத்துக்கோ பாராளுமன்றத்துக்கோ தேர்தல் வரும்போது நம் ஆட்கள் இனிமையான பரபரப்பில் மாட்டிக்கொள்வார்கள், செய்தித்தாள்கள், வார, மாத இதழ்கள், வானொலி, தொலைக்காட்சி, இணையம் என்று அனைத்து ஊடகங்களிலும் தேர்தல் தொடர்பான செய்திகளைத் தேடிப் படிப்பார்கள், உரையாடுவார்கள்.
வியப்பான விஷயம், தமிழில் வடமொழி, ஆங்கிலக் கலப்பு பெருமளவு இருந்தாலும், இந்தச் செய்திகள் அனைத்திலும் நாம் கேட்கிற அரசியல், தேர்தல் தொடர்பான பெரும்பாலான சொற்கள் தூய தமிழில் உள்ளன. தேர்தல் தொடங்கிப் பதவியேற்புவரை, கூட்டணி தொடங்கித் தொகுதி உடன்பாடுவரை, தேர்தல் அறிக்கை தொடங்கி நன்றியறிவிப்புக் கூட்டம்வரை, அமைச்சரவை தொடங்கி அவைத்தலைவர்வரை, முதல்வர் தொடங்கி ஆளுநர்வரை, ஆட்சித்தலைவர் தொடங்கி தொண்டர்வரை… எல்லாம் அழகழகான தமிழ்ச்சொற்கள், இங்குள்ள கட்சிகளின் பெயர்கள்கூட நற்றமிழில்தான் உள்ளன.
இந்தப் புதுமையான புத்தகம் தேர்தல் தொடர்பாக நாம் அடிக்கடி கேட்கிற சொற்களை அரசியல் கண்ணோட்டமின்றி மொழிக் கண்ணாடியை மட்டும் மாட்டிக்கொண்டு ஆராய்கிறது, அவற்றை ரசிக்கக் கற்றுத்தருகிறது
Be the first to review “தேர்தல் தமிழ்” Cancel reply
You must be logged in to post a review.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.