Description
நினைத்தாலே முக்தி தரும் அண்ணாமலையாரின் தரிசனத்திற்குப் பிறகு மாணிக்கவாசகர், திருவெம்பாவை புனைந்து பக்தி மார்க்கம் குறித்த நெறியைப் பதிவு செய்திருக்கிறார். திருவெம்பாவையின் 20 பாடல்களில் முதல் 8 பாடல்கள் சிவத்தன்மையை முன்னிலைப்படுத்துகின்றன. 9-வது பாடல் சாதகரின் சங்கல்பம் / வேண்டுதலையும், 10-வது பாடல் சிவ பிரமிப்பையும் எதிரொலிக்கிறது. மீதமுள்ள 10 பாடல்கள் பாவை நோன்பின் நீராடுதலுடன் தத்துவக் கருத்துகளின் தெறிப்பையும் தருகின்றன. தேனூறும் ஆன்மிகச் சாரத்தில் வாசம் மிகுந்த தத்துவ மலர்களைத் தொடுத்திருக்கும் தேன்மிகு திருவெம்பாவை என்ற இந்நூலில் பாடல்களின் விளக்கங்கள் உரிய ஒப்பீடுகளுடன், புதிய அணுகுமுறையில் அழகாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன. – மஞ்சுநாத் கடவுள் பழமையானவர். ஆனால் புதுமையானவரும் கூட. எப்படி என்பதை திருவெம்பாவையின் பாடல்களுக்கு இந்நூல் வழங்கியிருக்கும் உரைகளின் மூலம் தெரிந்து கொள்ளலாம். மனதில் பதியும் கட்டுரைத் தலைப்புகள், பாடல்கள், அவற்றின் பொருள், பார்வை, உட்கருத்து, தரும் புரிதல், ஒவ்வொரு பாடலிலும் உறைந்திருக்கும் கருப்பொருள் குறித்துச் சொல்லுவது என ஒரு அழகான ஒரு கட்டமைப்பை உருவாக்கி அதன் அடிப்படையில் அனைத்துப் பாடல்களையும் நம் மனதுக்குள் கடத்துகிறார் சரஸ்வதி சுவாமிநாதன்.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.