Description
தீக்குள் விரலை வைத்தால் இன்பம் தோன்றுமா? என்பதே, ‘தீ’யின் அடிப்படையான உசாவல். பல தடவைகளாக . . . வெவ்வேறான இடங்களில் . . . வித்தியாசமான பருவங்களில் . . . தீக்குள் விரலை வைக்கும் எத்தனங்களும், அவற்றுள் சிலவற்றில் ஏற்படும் தோல்வியும், சிலவற்றில் வெற்றி கொள்வதாக ஏற்படும் வீண் மயக்கமும், பின்னர் அவற்றின்பாலான விளைவுகள் தரும் வெம்மையிலும் பொசுங்கிப்போய்த் தறி கெட்டோடும் ஒரு மனிதனது கதையின் சில அத்தியாயங்களையே ‘தீ’ தொட்டுச் செல்கிறது. “தூரத்துப் பார்வைக்கு ஒளியாய், வெளிச்சமாய், அருகி வர அருகி வர வெப்பமாய், வெப்பம் அதிகரித்துச் சூடாகப் பரவும் நியதி“ என முந்தைய பதிப்பின் முன்னுரையில் இதை அழகாக விட்டல்ராவ் விபரிக்கின்றார். வாசகன் இவ்வாசகங்களுடன் ‘தீயாக எரிக்கும் நியதி’ எனவும் சேர்த்து வாசித்துக்கொள்கிறான்.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.