மகிழ்ச்சியாக இருப்பதற்கான துணிச்சல்
₹450 ₹428
- Author: ஃபூமிடாகா கோகா, இச்சிரோ கிஷிமி
- Translator: PSV குமாரசாமி
- Category: சுய உதவி / தனிப்பட்ட வளர்ச்சி
- Sub Category: கட்டுரை, சுயமுன்னேற்றம்
- Publisher: மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ்
Additional Information
- Pages: 340
- Edition: 1st (First)
- Year Published: 2023
- Binding: Paperback
- Language: தமிழ்
- ISBN: 9789355432391
Description
சர்வதேச அளவில் விற்பனையில் சக்கைப்போடு போட்டிருந்த ‘விரும்பப்படாத ஒருவராக இருப்பதற்கான துணிச்சல்’ என்ற நூலின் தொடர்ச்சி இது. நம்முடைய வாழ்க்கையை நாம் எப்படிப்பட்ட முறையில் வாழ வேண்டும் என்பதற்கான ஆழமான முன்னோக்குகளை இந்நூல் எளிமையான முறையில் எடுத்துரைக்கிறது.
‘விரும்பப்படாத ஒருவராக இருப்பதற்கான துணிச்சல்’ நூலைப் போலவே இந்நூலும், ஒரு தத்துவஞானிக்கும் ஓர் இளைஞனுக்கும் இடையே நடக்கின்ற விவாதங்களின் வடிவில் அமைந்திருக்கிறது. மகிழ்ச்சியான, மனநிறைவான வாழ்க்கையை வாழ்வதற்கான சூட்சமம், 20ஆம் நூற்றாண்டின் உளவியல் ஜாம்பவான்களாகத் திகழ்ந்த சிக்மன்ட் ஃபிராய்டுக்கும் கார்ல் யுங்கிற்கும் இணையாக விளங்கிய மற்றொரு தலைசிறந்த, அதிகமாக அறியப்படாத உளவியலாளரான ஆல்ஃபிரெட் அட்லரின் உளவியல் கோட்பாடுகளில் மறைந்துள்ளது என்று இதில் வருகின்ற தத்துவஞானி நம்புகிறார். ஆனால், அவரோடு மல்லுக்கு நிற்கின்ற இளைஞனோ, வெறுமனே உங்களுடைய சிந்தனையை மாற்றுவதன் மூலம் உங்களால் உங்களுடைய வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ள முடியும் என்று வாதிடுகிறான். அந்தத் தத்துவஞானி பொறுமையாக, அட்லருடைய “துணிச்சலின் உளவியலின்” சாராம்சத்தை விளக்கி, மகிழ்ச்சியையும் மனநிறைவையும் அடைவதற்குத் தேவைப்படுகின்ற படிப்படியான வழிமுறைகளையும், அந்த மாற்றங்கள் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்ற விதத்தில் எத்தகைய பிரம்மாண்டமான நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் எடுத்துரைக்கிறார். இது உண்மையிலேயே ஒருவருடைய வாழ்க்கையை முற்றிலுமாக மாற்றக்கூடிய சக்தியைக் கொண்டிருக்கின்ற ஓர் படைப்பாகும். இது அனைத்து விதமான பின்புலங்களைக் கொண்டிருப்பவர்களுக்கும் பொருத்தமாக இருப்பது இதன் தனிச்சிறப்பு.
Source: The Courage to be Happy: True Contentment Is Within Your Power
About the Author
1973 இல் பிறந்த ஃபூமிடாகா கோகா, விருதுகள் பல பெற்றுள்ள ஓர் எழுத்தாளர் மற்றும் நூலாசிரியர். அவர் பல வணிக நூல்களையும், பிற புனைகதை அல்லாத நூல்களையும் எழுதியுள்ளார். அவர் முப்பது வயதை நெருங்கிக் கொண்டிருந்தபோது, அவருக்கு அட்லரிய உளவியல் அறிமுகமானது. பாரம்பரிய ஞானத்திற்கு எதிரான அக்கோட்பாடு அவர்மீது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து, கோகா, இச்சிரோவைச் சந்திப்பதற்காக எண்ணற்ற முறை கியோட்டோவிற்குச் சென்றுள்ளார். கோகா, அட்லரிய உளவியல் கோட்பாடுகள் குறித்து இச்சிரோவிடமிருந்து நிறையக் கற்றுக் கொண்டார். தன் சந்திப்புகளின்போது, அட்லரிய உளவியல் கோட்பாடுகள் குறித்துத் தாங்கள் அலசிய விஷயங்கள் குறித்து விரிவான குறிப்புகளை எடுப்பதை அவர் ஒரு வழக்கமாக ஆக்கிக் கொண்டிருந்தார். கிரேக்கத் தத்துவ ‘உரையாடல் மாதிரி’யில் அமைந்திருந்த அந்தக் குறிப்புகள் இந்நூலில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
Be the first to review “மகிழ்ச்சியாக இருப்பதற்கான துணிச்சல்” Cancel reply
You must be logged in to post a review.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.