Description
எதிர்பாராத மழையின் சீற்றத்தில் சிறகொடிந்த பறவையின் அருகே அமர்ந்து ” பறத்தல் “என்ற மொழியை அறியத் துடிக்கும் இருள் தெய்வம் அதிகாலைப் பொழுதில் காற்றின் மொழியறிந்து காணாமல் போவது போல் மொழியின் திசையறிந்து கவிதை கூடு கட்டும் பறவைகள் தன் வலியறிந்து மிகு புனை சொற்களால் உயிரூட்டி தன்னினிமை, மாயத்தோற்றம், தீக்கோபம் என்று வாழ்வின் நுண் கண்ணிகளை ஜெயஸ்ரீயின் கவிதைகள் இணைக்கின்றன.அவ்வாழ்வே அவற்றின் அகமாகவும் புறமாகவும் அமைந்து தன்னிலே தனித்துச் சுவைக்கிற சொல்லால் காணாமல் போவது போல் நிறைவின் மைகளில் சுழன்று பின் மீண்டும் எழுகின்றன. கணத்தில் தோன்றி மறையும் சொல் எனும் மாயப்பறவையை பின் தொடர்ந்து, இளைப்பாறுதல் ஏதுமின்றி, கடக்கவியலாத தொலைவில் காத்திருப்பதும் அதன் மீது காதல் கொள்வதுமாக மனமெனும் தீராப் பெருவெளியில் விளைந்த கவிதை வயல்கள் இவை.
– மஞ்சுளா
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.