Description
“தனியே விளையாடிக்கொள்ளும் துணையில்லாக் குழந்தை நான்…’, ‘விளையாட்டிலிருந்து வெளியேற முடியாத விதிகளை நீ விதித்திருந்தாலும் மீளும் வழிகளில் பயணித்தாக வேண்டும் நான்…’ என்பது போன்ற வித்தியாசமான கவிதை வரிகளை வாசிப்பவர்கள் லயித்துப் போகலாம். மோனலிசாப் புன்னகை போல ‘தபுதாராவின் புன்னகை’ கவிதைகள் மயங்க வைக்கின்றன!”
– தினத்தந்தி
”இயற்கையின் ஒவ்வொரு அசைவிலும் ஒளிரும் உயிர்க்காதலை, தன்மையும் முன்னிலையுமாய் எடுத்துச் சொல்ல முனைகின்றன இந்தக் கவிதைகள். நவீன வாழ்க்கையின் முரண்களையும் அபத்தங்களையும் சொல்வதோடு, இயற்கையோடு இயைந்த வாழ்க்கைக்கான ஏக்கத்தையும் கிளர்த்துகின்றன. ஏதோவொரு தருணத்தில் கணநேரம் தோன்றி மறையும் எண்ணத்தைக் கவிதைகளுக்குள் சிறைபிடிக்கும் வித்தை, தாமரைபாரதிக்கு இயல்பாகவே கைவந்திருக்கிறது.”
– புவி, இந்து தமிழ் திசை
“நகரப் புழுதியில் மேலெழும்பும் இந்தக் கிராமத்துச் சித்திரம் மிகச் சிறந்த வாசிப்பனுபவத்தை வாசகனுக்கு வழங்கிடும் என்பதில் ஐயமில்லை.”
-கே.ஸ்டாலின்
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.