Description
நாவல் எழுதுதலுக்கும், சரித்திரத்திற்குமிடையே உள்ள வெளியில் தமிழவனின் புனைவுகள் பிறக்கின்றன. ஆகையால் அதர்க்கம் நிறைந்தவைகளாக இருக்கின்றன. இந்த தர்க்கமழிப்பு என்பது பொருண்மையின் எல்லையை விரிவடையச் செய்கிறது. ஒரு கதையாடவில் நாம் மூழ்கியிருக்கும் தருவாயில் அதை அர்த்தப்படுத்திக் கொள்ளும் முறை கேள்விக்குள்ளாகிறது.!
– கவிஞர் எஸ். சண்முகம்
தமிழவனின் இயற்பெயர் கார்லோஸ் சபரிமுத்து. கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்தவர். திருநெல்வேலி திருவனந்தபுரத்தில் படிப்பை முடித்து, பெங்களூர் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைப் பேராசிரியராக பணியாற்றியவர். போலந்து வார்சா பல்கலைக்கழகத்தில் ஐந்தாண்டுகள் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணியாற்றியவர். திராவிடப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றியிருக்கிறார். அதன் பிறகு ஆந்திர மாநிலம் குப்பம் நகரில் உள்ள பணியாற்றினார். தமிழ் தவிர மலையாளம், கன்னடம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் எழுதவும் பேசவும் தெரிந்தவர். கோட்பாடுகள், ஆய்வுகள், சிற்றிதழ் (சிற்றேடு – இவர் நடத்தும் இதழ்) மற்றும் படைப்புகள் என தொடர்ந்து இயங்கி வருகிறார்.
இவரது நாவல்கள்:
ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள்
சரித்திரத்தில் படித்த நிழல்கள்
ஜி.கே எழுதிய மர்மநாவல்
வார்ஸாவில் ஒரு கடவுள்
அம்பாலா
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.