Description
தமிழன் என்பவன் யார்?
என்று தோன்றியது தமிழ்?
தமிழ் மண் எது?
நாம் திராவிடரா தமிழரா?
இக்கேள்விகளுக்கு ஒவ்வொருவருடைய விருப்பத்திற்கும் நம்பிக்கைகளுக்கும் ஏற்றவாறு பலவகை பதில்கள் உலா வருகின்றன. ஆனால் பலநூறு தலைசிறந்த மானுடவியல், புவியியல், மொழியியல், தொல்பொருளியல் போன்ற துறைகளில் உள்ள ஆராய்ச்சியாளர்களின் ஆய்வுக்குறிப்புகளையும், விளக்கங்களையும் சான்றாகக் கொண்டு வெளிவந்துள்ளது இந்நூல். சென்ற சுமார் இருபது ஆண்டுகளில், மரபணுவியல் அகழ்வாராய்ச்சிகள் போன்ற அறிவியல் ஆய்வுகளால் பல மிக முக்கியமான, வரலாற்றை மாற்றக்கூடிய கண்டுபிடிப்புகள் வெளிவந்துள்ளன. உண்மை என்பது கற்பனையையும் மிஞ்சக் கூடும் என்னும் கூற்றுக்கு இணங்க, இந்த ஆய்வுகள் பல்வேறு பிரமிக்கத்தக்க செய்திகளை வெளியிடுகின்றன. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், திராவிட இனம் சுமேரியாவில் இருந்து குமரி வரை பரவி இருந்தது. தமிழை ஒத்த திராவிட மொழியே இந்திய துணைக்கண்டத்தின் முதல் மொழியாகவும் மூத்த மொழியாகவும் இருந்திருக்கிறது. சிந்து சமவெளி நாகரிக மக்கள் திராவிட மக்களே. பண்டைய தமிழர்கள் இயற்கை சார்ந்த, மரபார்ந்த வழிபாட்டு முறைகளையே கடைப்பிடித்து இருந்தார்கள். மேற்கண்டவை போன்ற பல உண்மைகளை தக்க சான்றுகளுடன் விளக்கியுள்ளது இந்நூல். தமிழர்களைப் புரிந்து கொள்ள விழைபவர்களுக்கு இது ஒரு அரிய பொக்கிஷம்.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.