Description
தமிழ் இலக்கணம் என்றாலே மாணவர்களும் சரி, ஆசிரியர்களும் சரி, ஆர்வமின்றி அணுகுவதை இன்றுவரை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். காரணம் என்ன? தமிழ் போன்ற ஒரு தொன்மையான மொழியின் செறிவார்ந்த இலக்கண வளங்களை அறிந்துகொள்வதற்கான பொறுமை இல்லை என்பதுதான். இதைக் கருத்தில்கொண்டு, இக்கால மாணவர்களும் ஆசிரியர்களும் எளிதில் தமிழ் இலக்கணத்தை அறியும் வண்ணம் எளிமையாக இந்த நூலை எழுதியிருக்கிறார் இந்நூலின் ஆசிரியர் கோபாலகிருஷ்ணன்.
‘தமிழ் இலக்கணம் – ஓர் எளிய அறிமுகம்’ என்னும் இந்தப் புத்தகம் உங்களது அடிப்படைத் தமிழறிவை வளர்ப்பதுடன், தொன்மையான தமிழ் இலக்கண நூல்களைப் பயில்வதற்கான பக்குவத்தையும் வழங்குகிறது. அருகில் இருந்து ஓர் ஆசிரியர் எளிதாக இலக்கணத்தைக் கற்பிக்கும் தொனியில் இந்த நூல் எழுதப்பட்டிருப்பது இதன் சிறப்பு.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.