Description
நானூறு வருடங்களுக்கும் மேலாக பக்தர்களின் மனம் கவர்ந்த கவிதை நூல், ஸ்ரீமந் நாராயணீயம். மகாவிஷ்ணுவாம், ஸ்ரீமந் நாராயணனைப் பற்றி, மேல்பத்தூர் நாராயண பட்டத்திரி என்ற கவிஞர் இயற்றிய ஆயிரத்து முப்பத்து நான்கு பாடல்களைக் கொண்ட பக்தி நூல். நூறு அத்தியாயங்களில் ஆயிரத்து முப்பத்து நான்கு பாடல்கள் உள்ளன. நாராயண பட்டத்திரி கவிஞர் அல்லர். திடீரென தனக்கு நேர்ந்துவிட்ட நோயைத் தீர்த்துக் கொள்ளும் விதமாகக் குருவாயூர்க் கண்ணனை நோக்கி, வலியோடும், வருத்தத்தோடும் பாடிய திடீர்க் கவிதை நூல்தான் ஸ்ரீமந் நாராயணீயம். நூறாவது பத்தின் கடைசிப் பாடலைப் பாடி முடித்தவுடன் பட்டத்திரியின் நோய் முற்றிலும் குணமாகிவிட்டது. பாராயணம் செய்து உயரிய பலனை அடைவதற்கான சரியான வழிமுறை கூறப்பட்டுள்ளது. சமஸ்கிருதம் தெரியாதவர்களும் நூலின் பொருளை உணர்ந்து குருவாயூர்க் கண்ணன் என்னும் தெய்வீக மருத்துவனின் அருளால் நலமும், வளமும் பெறவேண்டும் என்னும் உன்னத நோக்கில், எளிமையான, அதே சமயம் ஜீவனுள்ள அழகிய தமிழ் உரையை இந்நூலில் வழங்கியுள்ளோம்.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.