சொர்க்கத்தின் பறவைகள்
2021 ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர்
₹450 ₹383
- Author: அப்துல்ரஸாக் குர்னா
- Translator: லதா அருணாச்சலம்
- Category: இலக்கியம் & புனைவு
- Sub Category: நாவல், மொழிபெயர்ப்பு
- Publisher: எதிர் வெளியீடு
Additional Information
- Edition: 1st (First)
- Year Published: 2024
- Binding: Paperback
- Language: தமிழ்
Description
ஆப்பிரிக்காவின் மிகச்சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் அப்துல்ரஸாக் குர்னா.
– கில்ஸ் ஃபோடன்
அப்துல்ரஸாக் குர்னாவின் இப்படைப்பு 1994ஆம் ஆண்டு வெளியானது. இந்தக் கதை நடக்கும் காலகட்டம் 1915 -1917 ஆம் ஆண்டுகளுக்கிடைப்பட்டது. எண்ணற்ற காலனி ஆதிக்கங்களின் பிடியில் ஆப்பிரிக்க நாடுகள் சிக்கி அவர்களின் அதிகாரப் போர்களுக்கிடையில் தங்களது வளத்தையும் சுயத்தையும் இழக்கத் தொடங்கியிருந்த காலம். காலனித்துவத்தின் அடக்கு முறையையும் வெற்றியையும் அதனால் பூர்வக்குடிகளுக்கிடையே விளையும் அடையாளச் சிக்கல்கள், வாழ்வாதாரத்தின் இழப்புகள், இடம் பெயர்தல், துரத்தும் நினைவுகள், போன்றவையே குர்னாவின் பெரும்பாலான படைப்புகளின் வடிவமும் உள்ளடக்கமுமாக இருக்கின்றன. அந்நியப் படையெடுப்புகளால் அப்படியாகத் தொடர்ந்து சீர்குலைக்கப்பட்டுக் கொண்டிருந்த கிழக்கு ஆப்பிரிக்காவின் ஸான்ஸிபார் , டாங்கினிக்கா ஏரிப் பகுதிகளின்( தற்போது தான்ஸானியா ) பின்னணியில் நிகழும் வாழ்வியல் முறைமைகள், மனமாயங்கள், கனவுகள், கடந்த காலத்துடனான போராட்டங்கள், பொருளாதாரப் போதாமை, அடிமை வணிகத்தின் எச்சங்கள், ஆழ்மனதில் தேக்கி வைத்த விடுதலை வேட்கை, நிறைவேறாமல் போகும் துயர் மிகு காதல் ஆகியவற்றின் செழுமையான சித்திரமாக விரிகிறது சொர்க்கத்தின் பறவைகள்.
தந்தையின் திருப்பித் தர இயலாத கடன் தொகைக்காக ஒரு பெரும் வணிகரிடம் விற்கப்படும் சிறுவன் யூசுப் எளிய கிராமத்து வாழ்விலிருந்து கிழக்கு ஆப்பிரிக்காவின் துவக்கக் கால காலனித்துவ நகர வாழ்வின் சிக்கல்களுக்குத் துரத்தப்படுகிறான். அவனது பார்வையினூடாக இனக்குழுக்களின் பிரிவினை, நிலைகுலையும் உள்நாட்டு வணிகப் பயணங்கள், மானுட அறத்திற்குப் பண்ட மாற்றாக நிகழும் வியாபாரங்கள், அடிமை வாழ்வில் சுயமிழந்து போகும் மனிதர்கள் மற்றும் வளரிளம் பருவத்தின் தடுமாற்றங்கள் ஆகியவை காட்சிப்படுத்தப் பட்டிருக்கின்றன.
புதிய சூழலில் தங்களுடைய அடையாளத்தைக் கட்டமைப்பதற்காக வேறு வழியின்றி கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் சமரசம் செய்து கொள்ளும் பல கதை மாந்தர்களை இப்புதினத்தில் குர்னா படைத்திருக்கிறார். சிதைந்து போன பூர்வ நினைவுகளின் தாக்கத்தில் வெளிப்படும் இயலாமையின் கொந்தளிப்புகளுடனேயே அறிமுகமற்ற நில அமைப்புக்கும் சமூகச் சூழலுக்கும் அவர்கள் தங்களைப் பொருத்திக் கொள்ள முயல்கின்றனர்.
Be the first to review “சொர்க்கத்தின் பறவைகள்” Cancel reply
You must be logged in to post a review.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.