ஆண் பிரக்ஞையாலும் ஆணதிகாரத்தாலும் உருவாக்கப்பட்டுக் கட்டுமானம் செய்யப்பட்டு எழுகின்ற மனித வரலாற்றின் அஸ்திவாரக் கற்களை அசைக்க எந்தப் பெண்ணால் முடியும்? பைபிளில், ஒரு ஜெஸபெல் அதற்கு முயற்சி செய்தாள். – பின்னர் யார், என்ன? இதோ இங்கே மறுபடியும் வருகிறாள், ஒரு ஜெஸபெல் – சூரியனை அணிந்த ஒரு பெண். அவள் ஆண் உலகின் சட்டதிட்டங்களையும் சிந்தனைகளையும் அடிமுதல் முடிவரை கேள்வி கேட்கிறாள் – தன் சொந்த வாழ்க்கையை அதன் முன்னால் தூக்கியெறிந்துகொண்டு. அப்போது உலகத்தின் அஸ்திவாரக் கற்கள் அசையத் தொடங்குகின்றன. மற்றொரு உலகத்தைச் சாத்தியமாக்குவதற்கான அந்த நகர்வுகளில் நிறைய பெண்களும் பங்கேற்கின்றனர்.
– கே. ஆர். மீரா
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.