Description
உலகிலேயே அதி அற்புதமான சிலை மற்றும் உன்னதத் தத்துவமான சிவ பெருமானின் நடனம்/ தாண்டவம் குறித்த அற்புதமான கட்டுரை ஒரு பக்கம்; நவீன கால நீட்சேயின் ஜராதுஷ்டிரா முன்வைக்கும் தத்துவம் மறுபக்கம் என மரபுக்கும் நவீனத்துவத்துக்கும் இடையில் இரு கரங்களை நீட்டிப் பாலம் அமைப்பதுபோன்றதொரு பெருவெள்ளமாகப் பாய்கின்றது ஆனந்த குமாரசுவாமியின் சிந்தனைச் சிறு துளிகள். இந்து சிற்பங்கள், பௌத்த சிற்பங்கள் பற்றிய கட்டுரைகளில் நம் மனத்தில் அதி அழுத்தமான மாயச் சிற்பங்களைச் செதுக்குகிறார். இசை பற்றிய பக்கங்களில் நம் காதுகளில் மந்திர இசையைக் கேட்கச் செய்கிறார். இந்தியப் பெண்கள், ஐரோப்பிய பெண்கள் பற்றிய கட்டுரையில் உலகம் முழுவதிலும் பழங்காலத்தில் இருந்த பெண்களின் உண்மையான சுதந்தரத்தை நவீனப் பெண்களின் பொய்யான சுதந்தர சிந்தனைகளுடன் ஒப்பிட்டு எழுதியிருக்கும் கட்டுரையில் நூலாசிரியர் ஏற்படுத்தும் அதிர்ச்சிகள் நவீன உலகை உலுக்கக்கூடியவை. சஹஜ யோகம் பற்றிய கட்டுரையில் கூர்வாள் நுனியில் பாலே நடனம் ஆடுகிறார் ஆசிரியர். இந்து மதம், வரலாறு, கலை, கலாசாரம் ஆகிய துறைகளில் ஆர்வமும் அறிவுத்தேடலும் கொண்டிருக்கும் ஒவ்வொருவருக்கும் இந்நூல் ஓர் ஒப்பற்ற பொக்கிஷம்.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.