சித்திரச் சோலை
சிவகுமார் அவர்களின் ஓவியங்களுடன்
₹285 ₹271
- Author: நடிகர் சிவகுமார்
- Category: கலை, திரைப்படம் & புகைப்படம் எடுத்தல்
- Sub Category: சினிமா
- Publisher: இந்து தமிழ் திசை
Additional Information
- Edition: 1st (First)
- Year Published: 2021
- Binding: Paperback
- Language: தமிழ்
Description
‘சித்திரச் சோலை’க்குள் நுழையும் முன்…
பள்ளியில் சேர்க்கும்போதே, ‘டாக்டர், இன்ஜினீயர், கலெக்டர், வக்கீல், நீதிபதி, ஸ்ரீஹரிகோட்டா விஞ்ஞானி!’ எனக் குழந்தைகளுக்குள் கற்பிதங்களைச் சொருகி வந்த பெற்றோர்கள் இப்பொழுதெல்லாம் ரொம்ப மேம்பட்டு, ‘இந்தப் படிப்பு படிச்சா கேம்பஸ்ல வேலை நிச்சயம்தானே? கைநிறைய சம்பளம் கிடைச்சிரும்ல? வீடு முழுக்க பணமா கொட்டும்ல?’ என ஆசைகளைத் திணிக்காமல் இருந்தால் ஆச்சர்யம்தான்.
இன்றைக்கு 62 வருடங்கள் முன்பு – கணவனை இழந்த -கல்வியறிவே இல்லாத – காட்டு வேலை செய்து வந்த – குக்கிராமத்துத் தாய் -கடனை உடனை வாங்கி- தன் ஒரே மகனை, ‘பட்டணம் போயி, பொம்மைக் காலேஜ்ல படிக்கப் போறானாமா! அவனுக்குப் புடிச்ச படிப்பு; படிச்சிட்டு நல்லாயிருந்தாப் போதும்!’ என்று சொல்லி சென்னைக்கு ஓவியக் கல்வி பயில அனுப்பியிருக்கிறார் என்றால், அந்தக் கொடுப்பினை நம் பன்முகக்கலைஞர் சிவகுமாருக்கு மட்டுமே வாய்த்திருக்க வேண்டும். அந்தத் தாயை நாம் முதலில் வணங்க வேண்டும்.
‘ஓவியம்’ என்பது வெறும் படிப்பு அல்ல; அவருக்குள் ஜீவிக்கும் அந்தராத்மா!’ என்பது நடிகர் சிவகுமாருடன் நெருங்கிப் பழகியவர்களுக்குத் தெரியும். கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா என மும்-முதல்வரின் ‘சினிமா’ எனும் ‘ராஜபாட்டை’யில் மட்டுமல்லாது 192 திரைப்படங்கள், 86 முன்னணிக் கதாநாயகிகளுடன் நடித்திருக்கும் அவர் தன் நட்புகளைச் சந்தித்துவிட்டால் நெகிழ்ந்து போய் மணிக்கணக்கில் பேசுவது ஓவியங்கள் பற்றித்தான். அதில் பல வண்ணங்கள் விரியும். நிறைய பிரம்மாண்டங்களின் தரிசனம் கிடைக்கும். 7 ஆண்டுகள் மட்டுமே ஓவியத்துறையில் அவர் கால்பதித்து விட்டு சினிமாத்துறைக்கு வந்து விட்டாலும், ஈரேழு ஜென்மங்கள் ஓவியத்தில் இரண்டற கலந்ததைப் போல் விவரிப்பார்.
தான் பிறந்து வளர்ந்த சின்ன கிராமத்திற்குள் உள்ள வாழ்வியல் நுட்பங்கள். அம்மண் மணத்தின் சிணுங்கல்கள். அதற்குள்ளேயே நுழைந்து ஊடுருவி நுண்ணிய வெளியில் உணர்ச்சிக் குவியல்களை ‘கொங்கு தேன்’ எனும் தலைப்பில் இதுகாறும் 30 அத்தியாயங்களாக நமக்குப் பகிர்ந்தளித்து நெஞ்சம் நெகிழச் செய்த நம் பன்முகக்கலைஞர் சிவகுமார், இந்த அத்தியாயத்திலிருநது தன் ஆத்மார்த்தமான ஓவிய வெளி ‘சித்திரச் சோலை’ க்குள் பிரவேசிக்கிறார். இதுகாறும் அவரின் ‘கொங்கு தேன்’ சுவைத்த வாசகர்கள், இனி வரும் அத்தியாயங்களில் ‘சித்திரச் சோலை’யைத் தரிசியுங்கள். அதில் புதிய அனுபவங்களை மட்டுமல்ல, ஓவியக் கலைக்குள் நிரம்பித் ததும்பும் பிரம்மாண்டங்களையும் உணர்வீர்கள்.
Be the first to review “சித்திரச் சோலை” Cancel reply
You must be logged in to post a review.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.