சிறையில் ஒளிரும் நட்சத்திரங்கள்
₹330 ₹314
- Author: மதுரை நம்பி
- Category: சுயசரிதைகள், நாட்குறிப்புகள் மற்றும் உண்மை தரவுகள்
- Sub Category: நாட்குறிப்பு / நினைவுக்குறிப்பு
- Publisher: டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ்
Additional Information
- Edition: 1st (First)
- Year Published: 2022
- Binding: Paperback
- Language: தமிழ்
Description
நல்லதம்பி முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தின் பல சிறைச்சாலைகளிலும் காவலராக பணி செய்தவர். சிறைச்சாலையை அதன் உள்ளும் புறமுமாக அறிந்தவர். அதன் இருண்ட பக்கங்கள் அணைத்தையும் தெரிந்தவர்.
அது மட்டும் அல்லாமல் அவர் ஒரு இடதுசாரி. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலும் , தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திலும் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தீவிர களப்பணியாளராக இருந்து வருபவர்.
இடதுசாரி பார்வையும் சிறைச்சாலையும் ஒன்று சேரும் போது அது என்ன விளைவுகளை உருவாக்கியிருக்கும் என்று சொல்லவா வேண்டும்!
இந்த புத்தகம் தமிழக சிறைச்சாலைகளின் குறுக்குவெட்டுத் தோற்றத்தையும் குற்றம் செய்து தண்டனை பெறுகிறவர்களின் ஆழ் மனச் சித்திரங்களையும் நம்கண் முன்னே கொண்டு வருகிறது..
போராளிகள், தீவிரவாதிகள், கொலைகார ர்கள், கூலிக் கொலையாளர்கள், கொள்ளைக் கார ர்கள், திருடர்கள், கற்பளிப்பாளர்கள், குற்றம் செய்த மனநோயாளிகள் குற்றம் செய்த திருநங்கைகள் என ஒரு சிறைச்சாலைதான் எத்தனை விதமான மனிதர்களைக் கொண்டிருக்கிறது..
இவர்கள் எல்லோரும் ஒரே இடத்தில் அடைபட்டிருக்கும் அந்த இடம் என்னென்ன வினோதங்களைக் கொண்டிருக்கும் என்பது வெளியில் இருக்கும் நம்மால் யூகிக்க முடியாத ஒன்று..
நல்லதம்பி அந்த சிறைக்கூடத்தில் நிலவும் பயங்கரத்தையும் அதே சமயம் ஆங்காங்கே நட்சத்திரமென ஒளிரும் மனிதத்தையும் ஒருங்கே நமக்கு அறிமுகப் படுத்துகிறார்.
பல கட்டுரைகள் பெரிய பரபரப்பையும் பதட்டத்தையும் உண்டாக்குகிறது
இதற்கு முன்பு தமிழில் சிறைச்சாலை பற்றிய புரிதலுக்கு தோழர் தியாகுவின் ”சிறைக்குள் சித்திரங்கள்”, மற்றும் ”கம்பிக்குள் வெளிச்சங்கள்” என்ற இரண்டு புத்தகங்கள் மட்டுமே களஞ்சியமாக இருந்தன. இப்பொழுது நல்லதம்பியின் ”சிறையில் ஒளிரும் நட்சத்திரங்கள்” மேலும் ஒரு பொக்கிஷமாக நம் கரங்களுக்கு வந்து சேர்ந்திருக்கிறது.
வழக்கமாக அதிகாரிகள், காவலர்கள் புத்தகம் எழுதினால் அதில் ஒரு வறண்ட தன்மை இருக்கும். ஆனால் நல்லதம்பி முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமுஎசவில் இயங்குகிறவர் . ரஷ்ய இலக்கியங்களில் இருந்து ஜெயமோகன் வரை வாசித்துத் தீர்த்தவர். எனவே தேர்ந்ததொரு நடை இயல்பாகவே அவருக்கு வந்து சேர்ந்திருக்கிறது.
சிதம்பர நினைவுகளை பாலச்சந்திரன் சுல்லிக்காடும், துணையெழுத்தை எஸ். ராமகிருஷ்ணனும் எந்த நடையில் எழுதியிருக்கிறார்களோ அப்படி ஒரு நடையிலேயே நல்லதம்பி இந்த கட்டுரைகளை எழுதியிருக்கிறார்.
சில கட்டுரைகள் அசோகமித்ரனின் தரத்திலும் காஃப்காவின் தரத்திலும் இருப்பது தனிப்பட்ட முறையில் எனக்கு வியப்பு ஏற்படுத்துகிறது
Be the first to review “சிறையில் ஒளிரும் நட்சத்திரங்கள்” Cancel reply
You must be logged in to post a review.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.