Description
ஷாஜி எழுதும்போது உலகளாவிய இசையையும் அதன்பின் இயங்கும் மனித மனத்தையும் புரிந்துகொள்வதற்கான பல பாதைகள் திறக்கப்படுகின்றன. சிறு வயதிலிருந்தே அவதானித்துக் கேட்ட இசைகளின் தாக்கம் தனது வாழ்வை எப்படியெல்லாம் மாற்றியமைத்தது என்று அவர் கூறும்போது அது வாசகனின் இசை நினைவுகளாகவே உருமாறுகின்றன. எளிமையான, கவித்துவமான நடையில் எழுதப்பட்டிருக்கும் இந்த இசை வாழ்வுச் சித்திரங்கள் சிறுகதைகளைவிட சுவாரசியமாகப் படித்துச் செல்லக் கூடியவை. தமிழ், இந்திய, உலக வெகுஜென இசையைப் பற்றிய இத்தகைய கட்டுரைகள் இதற்கு முன்பு தமிழில் எழுதப்பட்டதில்லை. இசை விரும்பிகள் அனைவரும் படித்து, பேணிக் காக்கவேண்டிய இந்நூல் நவீன எழுத்தின் முக்கிய ஆக்கங்களில் ஒன்று.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.