உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன் இறைவனாகிய சிவபெருமான். தனது பக்தர்களைச் சோதிப்பதும், அந்தச் சோதனையை உலகம் போற்றும் சாதனையாக்குவதும் அவனது அளவற்ற திருவிளையாடல்களுள் ஒன்று. அப்படிச் சிவபெருமானால் பலவிதங்களிலும் சோதிக்கப்பட்டு, அவனால் ஆட்கொள்ளப்பட்டு, அவனது திருவடியை அடையும் சிறப்பைப் பெற்றவர்களே அறுபத்துமூன்று நாயன்மார்கள். அன்பு, கருணை, இரக்கம், ஈகை, பணிவு, வீரம், தொண்டு என்று பல அருங்குணங்களைப் பெற்றிருந்த அவர்களை, அந்த இறைவனே நாடி, தேடி வந்தான். அதுவும் இறைவனாக வராமல் எளியவனாக, அடியவனாக, சாதாரணனாக, மக்களில் ஒருவனாக வந்தான், அப்படிப்பட்ட தொண்டர்களின் பெருமையை, தொண்டின் சிறப்பைக் கூறுவதே சேக்கிழார் பெருமான் எழுதிய பெரியபுராணம்.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.