சத்திய சோதனை
₹300 ₹285
- Author: மகாத்மா காந்தி
- Translator: கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
- Category: சுயசரிதைகள், நாட்குறிப்புகள் மற்றும் உண்மை தரவுகள்
- Sub Category: தன்வரலாறு, மொழிபெயர்ப்பு
- Publisher: கவிதா பப்ளிகேஷன்
Additional Information
- Edition: 1st (First)
- Year Published: 2016
- Binding: Hardcover
- Language: தமிழ்
Description
சத்திய சோதனை (The Story of my Experiments with Truth) என்பது மோகன்தாசு கரம்சந்த் காந்தி எழுதிய அவருடைய வாழ்க்கை வரலாற்று நூல் ஆகும். தன்னுடைய வாழ்வு முழுவதும் ஓர் ஆய்வாளனின் ஆய்வுப் பயணம் போல எனக் குறிப்பிட்டிருக்கும் காந்தி தன் வாழ்க்கையை ஒரு திறந்த புத்தகம் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். தன் வாழ்வின் மறக்க இயலாத பகுதிகளைச் சமூகத்திற்கு ஞாபகப்படுத்த வேண்டிய பாடங்களாகக் குறிப்பிட்டுள்ளார். அவை யாவும் சத்தியத்திற்கு ஏற்பட்ட சோதனைகள் என்பது அவர் எண்ணம். அதனால் இந்நூலுக்கு சத்தியசோதனை என்று அவர் பெயர் வழங்கியுள்ளார். நான் செய்த சத்திய சோதனையின் கதை என்று திரு மோகன்தாசு கரம்சந்த் காந்தி தம் இளம் வயது முதல் 1921 ஆம் ஆண்டு வரையிலான தம் சரிதையை எழுதியுள்ளார். நவஜீவன் வாரப் பத்திரிக்கையில் 1925 முதல் 1929 வரை அவர் குஜராத்தி மொழியில் எழுதிய கட்டுரையின் தொகுப்பு. இதன் ஆங்கில மொழி பெயர்ப்பும் “யங் இந்தியா”[1]என்னும் ஆங்கில இதழில் பிரசுரமானது.சுவாமி ஆனந்த் மற்றும் அவருடன் பணியாற்றியவர்களின் தூண்டுதல் இதற்கு முக்கிய காரணம். இவர்கள் காந்தியடிகளின் பொது வாழ்க்கை பரப்புறைகளின் பின்புலங்களை பகிர்ந்து கொள்ளும்படி ஊக்கப் படுத்தினர். இந்நூல் 20ஆம் நூற்றாண்டின் 100 சிறந்த ஆன்மீக நூல்களுள் ஒன்றாக உலக ஆன்மீக மற்றும் மத ஆணையத்தால் தெரிவு செய்யப்பட்டது
Be the first to review “சத்திய சோதனை” Cancel reply
You must be logged in to post a review.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.