ஆதி சக்தியின் ரூபமான தாட்சாயிணியின் உடல் பாகங்கள் விழுந்த இடங்களில் எழுப்பப்பட்ட கோயில்கள் சக்தி பீடங்கள் என்று அழைக்கப்படுகின்றன. தந்தை தட்சனால் அவமதிக்கப்பட்ட தாட்சாயிணி, அவர் நடத்திய யாகம் அழியுமாறு சபித்தார். தட்சனின் மகள் என்று தான் அழைக்கப்படுவதை விரும்பாத அவர், பின்னர் அந்த யாகத் தீயிலேயே எரிந்து போகிறார். சிவபெருமானால் படைக்கப்பட்ட வீரபத்திரர் அந்த யாகத்தை அழித்தார். தாட்சாயிணியின் உடலை தன் தோளில் சுமந்து கொண்டு ஊழித்தாண்டவம் ஆடினார் சிவபெருமான். சிவபெருமானின் தாண்டவத்தை நிறுத்த, திருமால் தன் சக்ராயுதத்தை தாட்சாயிணியின் உடல் மீது செலுத்துகிறார். இதில் சக்தியின் உடல் 51 பாகங்களாக சிதறி பல்வேறு இடங்களில் விழுகிறது. இந்த 51 பாகங்களே 51 சக்தி பீடங்கள் ஆனதாக கூறப்படுகிறது.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.