‘சைகோன் – புதுச்சேரி’ பிரெஞ்சுக் காலனியாக இருந்த இந்தோசீனாவை தன்னுடைய புனைவு வெளிக்கான கதைக்களமாகக் கொண்டு ஒரு பேராறுபோல நகர்கிறது; ஒவ்வொன்றிலும் களத்தைத் தேர்ந்தெடுப்பதும், தகவல்களைத் திரட்டுவதும் தொடர்ந்து மொழிமயப்படுத்துவதும் என முப்பரிமாணங்களும் முழுமையாகச் செயல்படுத்தப் பட்டுள்ளன. கிருஷ்ணாவின் இத்தகைய எழுத்துப் பயணம் முழுவதிலும் நின்று செயல்படும் மற்றொரு முக்கியமான போக்கைக் கவனிக்க வேண்டும்; அதாவது அனைத்திலும் புதுச்சேரிப் பகுதியை ஏறத்தாழ 200 ஆண்டுகாலம் ஆண்ட பிரெஞ்சுக் காலனித்துவத்தின்கீழ் புதுச்சேரி மக்கள் பட்ட பெரும்பாட்டைத்தான் படைப்பாக்கித் தந்துள்ளார். இந்த அளவுக்கு பிரெஞ்சுக் காலனித்துவத்தின் கோரமுகத்தையும் தமிழ் நிலப்பரப்பிலும் பண்பாட்டுக் கூறுகளிலும் அது நிகழ்த்திக் காட்டிய மாற்றங்களையும் அவற்றால் பெருவாரித் தமிழ்மக்கள் அடைந்த வலிகளையும் வேதனைகளையும் இலக்கியமாக்கித் தந்தவர்கள், நாம் போற்றும் பிரபஞ்சனும், நம் போற்றுதலுக்குரிய நாகரத்தினம் கிருஷ்ணாவும்தான்
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.