ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை
₹250 ₹238
- Author: ஜிம் கார்பெட்
- Translator: SP. சொக்கலிங்கம்
- Category: சுயசரிதைகள், நாட்குறிப்புகள் மற்றும் உண்மை தரவுகள்
- Sub Category: நாட்குறிப்பு / நினைவுக்குறிப்பு, மொழிபெயர்ப்பு
- Publisher: கிழக்கு பதிப்பகம்
Additional Information
- Edition: 1st (First)
- Year Published: 2024
- Binding: Paperback
- Language: தமிழ்
Description
‘ஓ’வென்று அலறிக்கொண்டும் ‘ஆ’வென்று வியந்துகொண்டும் மட்டுமே இந்நூலை எவரும் வாசிக்க இயலும். விலங்குக்கும் மனிதனுக்கும் இடையில்; வாழ்வுக்கும் மரணத்துக்கும் இடையில்; வனத்துக்கும் கிராமத்துக்கும் இடையில்; துப்பாக்கிகளுக்கும் குத்திக் கிழிக்கும் கூரான நகங்களுக்கும் இடையில் நடைபெறும் நீண்ட போராட்டத்தின் கதை. ஒரு காலத்தில் உத்தரகாண்ட், இமயமலை உள்ளிட்ட பகுதிகளில் வாழ்ந்துவந்த மனிதர்களைச் சத்தமின்றி வேட்டையாடிக் கொண்டிருந்தது ஓர் ஆட்கொல்லி சிறுத்தை. கிட்டத்தட்ட 125 நபர்களைக் கொன்று அனைவரையும் குலைநடுங்கச் செய்த அந்தச் சிறுத்தையின் தடங்களைப் பின்பற்றிச் சொல்கிறார் உலகப் புகழ்பெற்ற வேட்டைக்காரரும் எழுத்தாளருமான ஜிம் கார்பெட். அது எப்படிப்பட்ட சிறுத்தை? மனிதர்களை அது எப்படி வேட்டையாடிக் கொன்றது? கொல்லப்பட்டவர்கள் யார்? யார் கண்களுக்கும் அகப்படாமல் மாயமாக இருந்த சிறுத்தை இறுதியில் எவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டது? எவ்வாறு கொல்லப்பட்டது? ஜிம் கார்பெட்டின் சிலிர்க்கவைக்கும் அனுபவங்களைச் சிறுத்தைபோல் பாய்ந்தோடும் நடையில் விவரித்துள்ளார் குக. சொக்கலிங்கம். முன்னதாக, இவர் கென்னத் ஆண்டர்சனின் வேட்டைக் குறிப்புகளை ‘ஆட்கொல்லி விலங்கு’ எனும் தலைப்பில் இதே விறுவிறுப்போடு எழுதியிருக்கிறார்.
Be the first to review “ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை” Cancel reply
You must be logged in to post a review.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.