Description
சிவசங்கர் எஸ்.ஜே.வின் மூன்றாவது சிறுகதைத் தொகுதி இது. முந்தைய இரு தொகுதிகளிலுமிருந்த கோட்பாட்டு விசாரணைகள், வடிவப் பரிசோதனைகள், அடர்த்தியான சொற்சேர்க்கைகள், வாக்கிய அமைப்புகள் போன்றவற்றைக் கைவிட்டுக் குழந்தமைக்குத் திரும்பியிருக்கிற கதைகள் இவை. ஒரு வட்டாரத்தின் குளிர்மையையும் அந்த நிலத் தோற்றத்தின் ஒருபக்க யதார்த்தத்தையும் பரிவையும் பேச்சு வழக்கின் பின்னிருக்கும் இதத்தையும் இக்கதைகளில் தரிசிக்க முடியும். இத்தொகுதியிலுள்ள கதைகள் வட்டாரத்தின் சமூக யதார்த்தத்தில் பின்னிப் பிணைந்திருக்கும் பன்மைத்துவத்தையும், மதமென்றும் சாதிகளென்றும் பிரிந்து கிடக்கும் அதன் நுண்ணிய அளவிலான நில வேறுபாடுகளையும் கொண்ட அசலான படைப்பாக உருப்பெற்றிருக்கின்றன.
இவை சிவசங்கர் என்கிற எழுத்தாளரின் துளிர் காலத்தைச் சொல்கிற கதைகள்
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.