Description
ஊரின் கண்மாய், புளியமர ரயிலாக நீண்டு கிடக்கும் கண்மாய்க்கரை, ஊருணிகள், கிணறுகள், ஆலமரங்கள், பழந்திண்ணி வவ்வால்கள் நிரம்பிய அத்தி, அரச மரங்கள், பால் வடியும் முதிர் வேப்பங்கன்னிகள், பாம்புகள் நெளியும் கோவில்கள், பேய்கள் தெலாப்போட்டு இரைக்கும் அழிந்த நந்தவனங்கள், மூக்கையாரெட்டியார் போன்ற நூறு வயதை எட்டிய எனது
மூத்த நண்பர்கள், நெஞ்சுக்குள் மத்தாப்பு கொளுத்தும் பெரிய கார்த்திகை,ஊர் முழுதும் கூடி ஆலமரங்களின் அடியில் அமர்ந்து பலவகைக் கஞ்சிகளைக் குடிக்கும் வடக்கத்தியம்மன் கஞ்சி, சேத்தாண்டி வேஷம்போடும் பங்குனிப் பொங்கல் போன்ற எங்கள் எளிய திருவிழாக்கள் என்று எவ்வளவு ஞாபகங்கள்? இருபது வயது வரையிலான எனது பால்யத்தையும் இளம்பருவத்தையும் கட்டமைப்பதில், ஒரு சமூக நானை எனக்குள் வளர்த்தெடுப்பதில் எனது ஊருக்குப் பெரும்பங்கு இருந்திருக்கிறது. எனவேதான் ஊரின் மீதான ‘மாயக்காதல்’ இன்றும் முடிந்தபாடில்லை…
– சமயவேல்
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.