Description
மொழியின் மீதான நாட்டமும், புலமையும் ஆழ்ந்த ஈடுபாடும் பின் வெற்றுச் சொல், மிகை உணர்ச்சி கலைந்து கவிதை உருவாக்கும் நவீன மரபில் இயங்கத் தொடங்கியபோது தன் கவிதைகளாலும் கவனிக்கப் பட்டு வருபவர் கவிஞர் சீனு ராமசாமி. பாரதிராஜா, மகேந்திரன், பாலுமகேந்திரா, பாலச்சந்தர் ஆகியோரால் உந்தப்பட்டு திரைப்பட துறையில் அடியெடுத்து வைத்திட்ட இவர் பின் நாட்களில் உலக சினிமாக்களில் தன்னை கரைத்துக் கொண்டார். சத்யஜித்ரே நவீன யதார்த்த கலைமரபில் தன்னை இணைத்துக் கொண்டு இயங்கி வருகிறார். தனது இரண்டாவது திரைப்படமான தென்மேற்கு பருவக்காற்று படத்திற்கு சிறந்த மாநில மொழி திரைப்படத்திற்கான தேசிய விருதையும் பெற்றார். சு0பு5ம் வருடம் தென் தமிழகத்தின் மிகப் பழமையான மதுரா கல்லூரி பவளவிழா கொண்டாடிய போது மதுரையில் இவருக்கு ‘மக்கள் இயக்குநர்’ என்ற பட்டத்தைக் கொடுத்து கௌரவித்தது. நவீன இலக்கியமும் அதே சமயம் மணிக்கொடி எழுத்தாளர்களின் வழியே செவ்வியல் மரபை அறிந்து அதன் அனுபவ பெருக்கில் கவிதைகள் எழுதியும் காட்சி ஊடகத்தில் பயணிக்கிறார்.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.