Description
இந்தியா பல்வேறு தேசிய இனங்களும், மதங்களும், மொழிகளும் சேர்ந்து வாழும் ஒரு பன்முகத்தன்மை கொண்ட நாடு. இந்த நாட்டின் சட்ட திட்டங்களும் அதே பன்முகத்தன்மையைப் பிரதிபலிப்பதுதான் பெருமை, சிறப்பு. இந்நாட்டு மக்களிடையே மனித உரிமைகள் பேணலில் வேறுபாடுகள், ஏற்றத்தாழ்வுகள் இருக்கக் கூடாது. பெரும்பான்மையினரின் சிவில் சட்டங்களை பிறர் மீது சுமத்தக்கூடாது. அதேபோல, பொது சிவில் சட்டம் ஒன்றை அனைவர் மீதும் வலிந்து திணிக்க முடியாது, கூடாது. ஒரே சட்டத்தின் பல்வேறு வடிவங்களை இயற்றி, அவற்றை பல்வேறு சமூகங்களுக்கானவையாக வைத்திருக்கலாம்.
அல்லது இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் உள்ள தனிநபர் சட்டங்களின் சிறந்த அம்சங்களைத் தேர்ந்து பொது சிவில் சட்டம் ஒன்றைத் தயாரிக்கலாம் என்பவைதான் பன்மைத்தன்மையை ஆதரிக்கிறவர்களின் வாதங்கள்.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.