Description
போராட்டம். இந்த வார்த்தை காலம் காலமாக உலகெங்கும் கோடிக்கணக்கான உதடுகள் உச்சரித்துக்கொண்டிருக்கும் வார்த்தை. தனக்கான உரிமை மறுக்கப்படும்போதெல்லம் அதைப் பெற மனிதனுக்கு இயற்கை கொடுத்த ஆயுதம்தான் போராட்டக் குணம். உலகத்தில் பல மாற்றங்களும் முன்னேற்றங்களும் காலம்தோறும் நிகழ்ந்துகொண்டே இருக்க போராட்டமே ஆணிவேர். ஆண்டான் அடிமை முறை, முதலாளித்துவத்தின் அடக்குமுறை, தனியுடைமை இவற்றையெல்லாம் நீர்த்துப்போகச் செய்ததே போராட்டம்தான். ஆனால், இவை இன்னும் முற்றுமாக ஒழிந்துவிடவில்லை. வேறு பெயரில் வேறு உருவில் ஆங்காங்கே அவ்வப்போது தோன்றிக்கொண்டுதான் இருக்கின்றன. அப்போதெல்லாம் முன்வந்து நின்று அதை முடக்கிப்போடுவது போராட்டம்தான். காந்தி தலைமையில் வெறும் 50 பேருடன் தொடங்கி இறுதியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்ட உப்பு சத்தியாகிரகப் போராட்டப் பயணம் பிரிட்டிஷ் ஆதிக்கத்தையே அசைத்துப் பார்த்தது. தமிழ்நாட்டின் அரசியல் எதிர்காலத்தையே மாற்றிய இந்தி எதிர்ப்புப் போராட்டம், குலக்கல்வி திட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டம் என தமிழ்நாடு தொடங்கி உலகம் முழுதும் நடந்த பல்வேறு போராட்டங்களைப் பற்றி ஜூனியர் விகடனில் வெளிந்த கட்டுரைத் தொடரின் தொகுப்பு நூல் இது. வீறுகொண்டு எழுந்த பற்பல போராட்டங்களைப்பற்றி அறிய வாருங்கள்!
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.