Description
‘நான் வளர்ந்து பெரியவனானதும் டாக்டராவேன்’ என்றோ ‘கலெக்டராவேன்’ என்றோ சிறுவயதிலேயே சொல்லப் பழகிவிடுகிறார்கள் குழந்தைகள். ஆனால், அதற்கு என்ன வழிமுறை? ஒரு மருத்துவரோ பொறியாளரோ மேலாளரோ அந்த நிலையை எட்டவேண்டுமென்றால் அதற்கு என்னென்ன கற்கவேண்டும், என்னென்ன செய்யவேண்டும்?
ஆசிரியர், கட்டடப் பொறியாளர், மென்பொருளாளர், வழக்கறிஞர், கணக்குப்பதிவாளர், விவசாய வல்லுனர், உணவு வல்லுனர், சந்தைப்படுத்தல் (மார்க்கெட்டிங்) வல்லுனர், அரசு அலுவலர், மேலாளர், மருத்துவர், தொழில்முனைவோர் என 12 வெவ்வேறு பணிகளை எடுத்துக்கொண்டு அவற்றில் ஈடுபடுவதற்கான, வெற்றிபெறுவதற்கான வழிமுறைகளை எளியமுறையில் அறிமுகப்படுத்தும் நூல் இது. கோகுலம் சிறுவர் இதழில் ஓராண்டு தொடராக வெளிவந்து குழந்தைகள், பெற்றோர், ஆசிரியர்களின் பெரும் வரவேற்பைப் பெற்ற தொடர், இப்போது நூல் வடிவில்.
படியுங்கள், தெளிவு பெறுங்கள், கல்வியால் மேன்மை பெறுங்கள்!
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.