பிரிவினையின் பெருந்துயரம்
₹340 ₹323
- Category: வரலாறு
- Sub Category: இந்தியப் பிரிவினை
- Publisher: சுவாசம் பதிப்பகம்
Additional Information
- Edition: 1st (First)
- Year Published: 2024
- Binding: Paperback
- Language: தமிழ்
Description
1947 ஆகஸ்ட் 14 & 15 – முறையே பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் சுதந்திரம் கிடைத்த நாள்கள். இந்தியாவின் சுதந்திரம், பல நூறு ஆண்டுகளாக ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடிய பலரது தியாகத்தால் கிடைத்தது. ஆனால் பாகிஸ்தானின் சுதந்திரம், இந்தியப் பிரிவினை என்ற பெயரில் லட்சக்கணக்கான நம் சொந்த மக்களின் உயிர்ப்பலிகளின் மேல் கட்டி எழுப்பப்பட்டது. எதற்காக இந்தப் பிரிவினை? இதனால் மக்களுக்கு ஏதேனும் நன்மை ஏற்பட்டதா? இது அரசியல் தீர்வா அல்லது மக்களையும் மதத்தையும் பகடைக்காய்களாக வைத்து நடத்தப்பட்ட விளையாட்டா? இந்தப் பிரிவினையை காந்திஜியும் மற்ற தலைவர்களும் எப்படி எதிர்கொண்டார்கள்? ஜின்னாவின் நோக்கம் என்ன? இந்தியப் பிரிவினையின் முழுமையான வரலாற்றை இந்தப் புத்தகம் ஆதாரத்தோடு விளக்குகிறது. பிரிவினையின் தொடக்கம், அதில் தலைவர்களின் பங்கு, அவர்களுக்கிடையே நடந்த கருத்து மோதல்கள், அன்றைய அரசியல் மற்றும் மக்களின் நிலை, பிரிவினைக்கு முன்பும் பின்பும் நடந்த சம்பவங்கள் என அனைத்தையும் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் மனதைத் தொடும் வகையில் பதிவு செய்துள்ளார். இந்திய வரலாற்றின் அழிக்க முடியாத ரத்தக்கறை படிந்த பக்கங்களுக்குள் இந்தப் புத்தகம் உங்களை அழைத்துச் செல்லும்.
Be the first to review “பிரிவினையின் பெருந்துயரம்” Cancel reply
You must be logged in to post a review.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.