Description
சொந்த மண்ணில் அல்லாமல் ஊருக்கு வெளியே துடித்தடங்கும் ஒரு உயிர், நிம்மதியின்றி ஏங்கித் தவித்தலையும். அப்படி ஏக்கத்தோடு அலையும் அந்த உயிரின் தவிப்பைக் குறிப்பால் உணர்ந்துகொண்ட ரத்தசொந்தம் உடுக்கடித்து, குறிகேட்டு சொந்த மண்ணுக்குக் கொண்டுவந்து நிலைநிறுத்தும்.
பொதுவாக இறந்தவருக்குத்தான் பிடிமண் எடுப்பார்கள். ஆனால் இந்தக் கதை இறப்பதற்கு முன்பாக எடுக்கும் பிடிமண் பற்றியது.
கிராமத்துக்காரர்கள் வெள்ளந்தியானவர்கள் என்பது எவ்வளவு உண்மையோ, அவ்வளவு உண்மை அவர்கள் வைராக்கியமானவர்கள் என்பதும்.
வரப்புச் சண்டைக்காக வாழ்நாளெல்லாம் வழக்குகளைச் சந்தித்து அழிந்தவர்களும், கோழிச் சண்டைக்காக துக்க வீட்டிற்குப் போகாதவர்களும் கிராமத்தில்தான் இருக்கிறார்கள்.
சொந்த மண்ணை விட்டு விதிவசத்தால் தூரமாய்ப் போன ஒரு கிராமத்து வைராக்கிய மனுசியின் கதை இது. காடு, மேடு, வெயில், மழையெனப் பாராமல் மாடாய் உழைத்து ஓடாய் தேய்ந்துபோன அந்த வீம்பு மனுசியின் நெஞ்சுக் கூட்டுக்குள் பொதிந்து கிடந்த நிறைவேறா ஆசையைப் பற்றி ரத்தமும் சதையுமாக கதைக்கும் கதை இது.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.