Description
அன்பே மானுட வாழ்வின் அர்த்தமெனச் சொன்ன ததாகதரின் சீடர்கள் வெறுப்பையும் துவேஷத்தையும் தங்கள் அடையாளமாக வரித்துக்கொண்ட காலகட்டத்தில் பிறந்தவள் நான். குடும்பத்தின் அச்சு துவேஷத்தின் தீச்சுவாலைகளுக்குப் பலியாகி விட்டது. அதன் விளைவாக வெறுப்பின் விஷநாவுகளில் மாட்டிக் கொண்டுவிடாமல் இளம் வயதிலிருந்தே நான் கவனமாக இருந்தேன். என் காலத்தில் துவேஷம் பாசி படர்வதைப்போல் படர்ந்துகொண்டிருந்தது. காலை வெயில் கொஞ்சம் கொஞ்சமாகப் பூமிப்பந்தில் விழுந்து நிறைவதைப் போல் நிறைந்துகொண்டிருந்தது துவேஷம். அதுவரை அன்பின் நிழலில் பாடிக்கொண்டிருந்தவர்கள் வெறுப்பின் வெம்மையில் கருகிக்கொண்டிருந்தார்கள். திடீரென்று இந்த நிலத்தின் நிறம் சிவப்பாக மாறியது. திடீரென்று தாமரை இலைகள் மனித உடல்களைத் தின்னத் தொடங்கின.
குழந்தைகள் அதுவரை விளையாடிக்கொண்டிருந்த பொம்மைகளைத் தூக்கிப் போட்டுவிட்டு துப்பாக்கிகளை ஏந்தியபடி போர்ப்பாடல்களைப் பாடத்தொடங்கினார்கள். அப்பாடல்களில் தெரிந்த பெருமிதத்தையும் துக்கத்தையும் வன்மத்தையும் கண்டு தாமரை இலைகள் நடுங்கின.
– நாவலிலிருந்து…
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.