மரபு-மீறல், புனிதம–கலகம் ஆண்நிலையின் இருநிலை அடையாளங்கள். ஆண்நிலையால் உருவாக்கப்பட்ட பெண்நிலை மொழியைத் தகர்த்து பெண்மொழிப் பொருளுள்ள உலகை உருவாக்கி, முரண்படுதலின் வழி பெண்ணிய எழுத்தின் வலிகளைக் களைந்து எழுகிறது பேய்மொழி. இடமற்றஇடத்தையும் மொழிகலைந்த மொழியையும் கடந்து மொழிபெருகும் மொழியால் இடம் பெருகும் இடத்தை உருவாக்குதலும் கண்டடைதலுமே பேய்அலைச்சல். இருநிலைத் தகர்ப்பு, இருநிலை உருவாக்கம், நான்–பிற, அதிகாரம், காதல், காமம், இயற்கை, தொன்மம், உருவகம், படிமம், இயல்பு, இயல்பின்மையைக் கடத்து நிகழ்பவைமாலதி மைத்ரியின் கவிதைகள். உலகஅரசியலின் பெரும் உடைவுகளும், ஏற்கப்பட்ட வன்முறைகளும் பெருகிய காலத்தில் எழுத நேர்ந்துவிட்டகவிதைகளின் யானைக் கதைகளைக்கொண்டு வந்து யாரிடம் கொடுப்பதெனத் தேடுவது. புரட்சிகர அரசியலின்உடைவுகளில்புதைந்து போன மாற்றம் பற்றிய கனவுகளின் கூச்சலிடும்மொழியால் ரயில் பாதைகளில் ஊரும் நத்தைகளுக்காகஉலகின்போக்குவரத்து விதிகளை மாற்றித்தான் ஆகவேண்டும்எனச்சொல்கிறது.இதுதான்பெண்மொழியா என்ற கேள்விக்கு இருக்கட்டும் அது பேய்மொழியாகவே. – பிரேம்
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.