பத்து தமிழ்க் காப்பியங்களின் கதைகள்
₹450 ₹428
- Author: ராமசாமி மாரப்பன்
- Category: இலக்கியம் & புனைவு
- Sub Category: நாவல்
- Publisher: அகநாழிகை
Additional Information
- Edition: 1st (First)
- Year Published: 2022
- Binding: Paperback
- Language: தமிழ்
Description
பத்து தமிழ்க் காப்பியங்களின் கதைகள் என்கிற இந்நூல் சீவக சிந்தாமணி, மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, நீலகேசி, சூளாமணி, யசோதர காவியம், உதயண குமார காவியம், நாக குமார காவியம் ஆகியவற்றின் விரிவான சாரமும், விசாலமான சுருக்கமும் ஆகும். பண்டிதர்கள், பல்கலைக்கழகங்களின் தனிச்சொத்தாக அறைக்குள் போட்டு அடைத்து அலங்கரிக்கப்பட்டு, செய்யுள் போர்த்துக்கிடந்த அவைகளின் ஆடைகளை அவிழ்த்து நிர்வாணமாக்கி பொதுவெளியில் எளிய நடையில் சாதாரணங்களும் வாசிக்க நடமாட விடும் முயற்சி இது. கிரேக்க, ஆங்கில, சமஸ்கிருத இதிகாஸங்களும் இதனுடன் தோய்த்து விமர்சிக்கப்படுவது கூடுதல் பலம். இல்லறத்துக்குப் பின் துறவறமே என்பது இவைகளில் ஒலிக்குத் தத்துவப் போராட்டக் குரல்.
நவீன நாவலைப் போல் கட்டமைக்கப்பட்டிருக்கும் இதில் தமிழ் மற்றும் இந்தியத் துணைக் கண்டத்தின் அந்தக்கால அனைத்து முக்கிய நாடுகளும், நகரங்களும், ஆலயங்களும், நதிகளும், மலைகளும், நாகரிகங்களும், நாயகன்களும், நாயகிகளும் உயிரோடு கண் முன் நடமாடுவதைப் போலவே ஈடும் எடுப்புமாக வந்து போகிறார்கள். கவிகளுக்குப் பொய் பேசவோ, பூசி மெழுகவோ தெரியாது என்பதை காவியத் தலைவிகளின் சாமுத்ரிகா லட்சணங்களை உள்ளபடியே வர்ணிப்பதில் நிரூபணமாகிறது. சென்று தேய்ந்த செழுமையான பொற்காலங்களின் புகழ் மீது சொரிந்த ஆசிரியரின் ஏக்கப் பெருமூச்சே இந்நூலிலும் சிந்திக் கிடப்பது வெளிப்படையாகத் தெரிகிறது
Be the first to review “பத்து தமிழ்க் காப்பியங்களின் கதைகள்” Cancel reply
You must be logged in to post a review.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.