‘பருவம்‘ குறித்து ‘கல்கி‘யில் எஸ்.எல்.பைரப்பா அளித்த நேர்காணலில் இருந்து சில பகுதிகள்// சாகித்ய அகாடமி விருது பெற்ற உங்களின் “பருவா’ பற்றிச் சொல்லுங்கள்… “பருவா’ நாவலை நான் எழுதுவதற்கு முன்பு மஹாபாரதம் நடந்ததாகச் சொல்லப்படும் இமய மலைப் பிரதேசங்கள், கடுவால் ஆகிய இடங்களுக்குச் சென்று வாழும் மலைவாழ் (பாண்டவர்களின் வாரிசுகள்) மக்களிடம் பழகி அவர்களுடைய பழக்க வழக்கங்கள், சம்பிரதாயங்களைப் பற்றி அறிந்தேன். அது சம்பந்தமான நூல்களைப் படித்து ஆராய்ச்சி செய்ய 5 வருடங்கள் ஆனது. நாவலாக எழுதி முடிக்க, ஒன்றரை வருடம் ஆனது. சரிபார்க்க 1 வருடம் ஆனது. மொத்த 7 1/2 வருடங்கள் ஆனது. இதை எழுதி முடித்தது 1975ல்.* இது புராணக் கதை இல்லையா?புராணம் என்றாலும், புராணத்தை அப்படியே ஒதுக்கி விட்டு, சரித்திர அடிப்படையில் எழுதினேன். இதை பருவம் என்கிற தலைப்பில் தமிழில் சாகித்ய அகாடமி வெளியிட்டிருக்கிறது. நன்றி: கே.என்.சிவராமன்
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.