பணம் பழகலாம்
- Author: சொக்கலிங்கம் பழனியப்பன்
- Category: வணிகம் & பொருளாதாரம்
- Sub Category: கட்டுரை, வணிகம்
- Publisher: விகடன் பிரசுரம்
Out of stock
Additional Information
- Pages: 93
- Edition: 1st (First)
- Year Published: 2021
- Binding: Paperback
- Language: தமிழ்
- ISBN: 9789388104081
Description
சம்பாதிக்க… சேமிக்க… செலவுக்கு… கடனுக்கு… முதலீட்டுக்கு… என நம்முடன் பணம் அன்றாடம் பழகிக் கொண்டிருக்கிறது. ‘இடது கை சேமிப்புக்கு வலது கை செலவுக்கு’ என்பது, பணத்தின் அருமையை விளக்கி நம் முன்னோர்கள் வகுத்துச் சொன்னது. ஆனால், நாம் சம்பாதிக்கும் பணம் தற்போது நம் கைகளில் வருவதில்லை. வங்கிக் கணக்கில் சேமிப்பது இல்லையெனில் செலவழிந்து விடுவதிலேயே பணத்தின் பயன் முடிந்துவிடுகிறது. ஈட்டும் பணத்தை செலவழிக்காமல் அந்தப் பணத்தைக் கொண்டு இன்னும் வருமானம் பெருக்குவதுதான் புத்திசாலித்தனம். அந்த நுணுக்கங்களைச் சொல்கிறது இந்த நூல். வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு இந்திய சேமிப்பு முறைகள் என்னென்ன.. மாதாந்திர வருமானத்துக்கு பென்ஷன் பெற கணக்கு தொடங்கும் முறை.. குழந்தை களுக்கு பாக்கெட் மணியின் அவசியம்… என அவசியமான பல தகவல்களை அளித்திருக்கிறார் நூலாசிரியர். வங்கிக் கடன் மூலம் ஒரு பொருள் வாங்கினால் அதற்கான கடனை அடைத்துவிட்டு அடுத்த பொருள் வாங்க வேண்டும். ஒரே நேரத்தில் வீட்டுக்கடன், வாகனக் கடன், பர்சனல் லோன், கிரெடிட் கார்டு இப்படிப் பல இன்னல்களில் போய்ச் சிக்கி அமைதியான வாழ்க்கையை சிதைத்துக்கொள்ளாமல் பணத்தைப் பாதுகாக்கத் தெரிந்திருப்பது அவசியம். சம்பாதிக்கும் பணத்தை எப்படிச் செலவழிக்கலாம்.. எப்படி சேமிக்கலாம்.. எந்த முதலீட்டில் சேர்க்கலாம்.. பணம் போதவில்லை என்றால் எது எதற்கெல்லாம் கடன் வாங்கலாம்.. அதிக வட்டியில் மாட்டிக்கொள்ளாமல் அந்தக் கடனை கை கடிக்காமல் எப்படி கட்டலாம்… என்பதில் தொடங்கி கல்வி, மருத்துவம், வீடு ஆகியவற்றைத் தவிர மற்ற எதற்கும் கடன் வாங்காமல் சேமிப்பிலிருந்தே செலவு செய்வதுதான் சரியான வாழ்க்கை முறையாகும் எனச் சொல்லி வழிகாட்டுகிறது இந்த நூல்.. பணத்தோடு பழகுவோம்… பயணிப்போம்… பாதுகாப்போம்
Be the first to review “பணம் பழகலாம்” Cancel reply
You must be logged in to post a review.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.