Description
கவிஞர் திரு. நா.வே. அருள் அவர்களின் கவிதைத் தொகுப்பு “பச்சை ரத்தம் – இந்திய விவசாயிகளின் யுத்த கீதங்கள்” என்ற கவிதை நூலைப் படிக்கும் நல்வாய்ப்பு கிடைக்கப்பெற்றது. நமது இந்தியாவைப் போன்ற நாடுகள் பொருளாதாரத்தில் வளர்ச்சி பெற வேளாண்மை எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த முதுகெலும்பாகத் திகழ்கிறது என்பதையும், விவசாயிகளின் நிலை, இயற்கை, சமூக அக்கறை, என பலதரப்பட்ட பொருண்மைகளை, கவிதை நயங்களில் அழகான வார்த்தைப் பிரயோகங்கள் மூலம் தன் கவிதைகளை எழில்கூட்டி மலர விட்டுள்ளார்.
சின்னச்சின்ன சொற்றொடர்களில் கவிதை வரிகளை அடுக்கி, படிப்பதற்கு எளிதாகவும் சொல்ல வந்த விசயத்தை சுவையாகவும் சொல்லிச் செல்கிறார்.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.