Description
துளசி, சுமித்ரா, துர்க்கி, மெஹருன்னிஸா ஆகிய பெண்களின் கதைகள் வழியாகப் பெண்ணுடலை, மனத்தை, உழைப்பை, வயது வித்தியாசமின்றிப் பெண்கள் சுரண்டப்படும் அவலத்தை இக்கன்னடச் சிறுகதைகளின் வழியாக மிக ஆழமாக அறிந்துகொள்ள முடியும். நிராகரிக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட, சுரண்டலுக்குள்ளான பெண்களின் துயரங்கள் இத்தொகுப்பின் அடிநாதமாக ஒலிக்கின்றன. ஜெயந்த் காய்கிணி எழுதிய பால் மீசை சிறுகதையில் வரும் சிறுமியும் தி. ஜானகிராமனின் சிலிர்ப்பு சிறுகதையில் வரும் சிறுமியும் காலத்தைக் கடந்து இணையும் அற்புதம் நிகழ்கிறது. கன்னடத்தில் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கும் மேலாக எழுதிவரும் கவிஞரும் புனைகதை எழுத்தாளருமான ஜெயந்த் காய்கிணியின் ஏழு கதைகளுடன் விவேக் ஷான்பாக், எஸ். திவாகர் முதலான கன்னட எழுத்தாளர்களின் புகழ்பெற்ற கதைகளையும் அவற்றின் தன்மைகள் சற்றும் மாறாத முறையில் சிறப்புற மொழிபெயர்த்திருக்கிறார் நஞ்சுண்டன். தமிழ்ச் சிறுகதை உலகிற்குப் புதிய திறப்பாக அமையக்கூடிய தொகுப்பு இது.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.