Description
யதார்த்தம், புனைவு மற்றும் மிகுபுனைவு ஆகிய மூன்று தளங்களையும் ஓரிதழ்ப்பூவின் கதைவெளி உள்ளடக்கி இருக்கிறது. இக்கதாபாத்திரங்கள் மிகவும் தனித்தன்மையானச் சிக்கல்களைக் கொண்டிருக்கிறார்கள். இந்நாவல் உருவாக்கும் மாயவெளியில் வாசகர்கள் தங்களை முற்றிலும் கரைத்துக்கொள்ள முடியும். வாசிக்கும் போதே தரையில் கால் நழுவும் அனுபவத்தைத் தரக்கூடிய அய்யனார் விஸ்வநாத்தின் எழுத்து, ஒவ்வொருவரின் நிகழையும் பலவந்தமாகப் பிடுங்கி கனவில் எறிகிறது. இப்புனைவின் புதிர் வெளியெங்கிலும் ஓராயிரம் இதழ்கள் கொண்டப் பூக்கள் ஒரே நேரத்தில் பூக்க ஆரம்பிக்கின்றன. வாசகராய் உள் நுழையும் எவரும் இக்கனவு வெளியில் தொலையாமல் மீளும் சாத்தியங்கள் மிகக் குறைவு.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.