Description
பத்துப் பதினைந்து கொள்கைத் தீவிரர்கள் ஒருங்கிணைந்து ஆரம்பித்த இயக்கம் அல்ல இது. ஒத்தை ஆசாமி. அசப்பில் தாடி வைத்த தக்காளிப்பழம் மாதிரி இருக்கும் ஷோகோ என்கிற இந்த மனிதர் சைக்கோவா, பைத்தியமா, அரை லூசா, முழுத் தீவிரவாதியா என்று அவர் கைதாகிப் பலவருடங்கள் ஆனபின்பும் கண்டுபிடிக்க முடியவில்லை.
ஆனால் எண்பதுகளில் இவரது இயக்கம் புகழின் உச்சத்தில் இருந்தபோது ஜப்பானிலும் ரஷ்யாவிலும் ஆஸ்திரேலியாவிலும் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் இவருக்கு இருந்தார்கள். வழிபடும் தொண்டர்கள். அவர் ஒரு வார்த்தை சொன்னால் ஊரையே காலி பண்ணிவிடத் தயாராக இருந்த வெறிபிடித்த பக்தர்கள். ஊரையென்ன, உலகத்தையே. உண்மையில் அதைத்தான் தன் லட்சியமாகவும் அவர் கொண்டிருந்தார்.
ஜப்பானிய ௐ ஷின்ரிக்கியோ இயக்கத்தைக் குறித்துத் தமிழில் வெளிவந்துள்ள ஒரே நூல் இதுதான்.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.