Description
தஸ்தயேவ்ஸ்கியின் சிறிய நாவலான The Eternal Husband அவருடைய மற்ற நாவல்களிலிருந்து சற்று வேறுபட்டது. ‘வடிவரீதியில் இலக்கிய நயம் பொருந்திய கச்சிதமான படைப்பு. மையக்கதையிலிருந்து எந்த விலகலோ, குறுக்கிடும் துணைக்கதைகளோ, துணை பாத்திரங்களோ, இணை விளக்கவுரைகளோ, பகுப்பாய்வோ’ காணப்படாத, அதிகம் வெளிச்சத்துக்கு வராத படைப்பு என்கிறார் ரஷ்ய செவ்வியல் படைப்புகளை மிகத் துல்லியமாக மொழிபெயர்த்துவரும் ரிச்சர்ட் பேவியர்.
இப்போது இந்நாவல் நர்மதாவின் சிரத்தையான மொழிபெயர்ப்பில் வெளிவருகிறது. இரண்டு ஆங்கில மொழிபெயர்ப்புகளை ஒப்பிட்டு வாசித்து கிட்டத்தட்ட ஒரு வருட காலமாக திரும்பத் திரும்ப திருத்தி பலமுறை மறுவரைவு செய்து நர்மதா மொழிபெயர்ப்பை நிறைவு செய்தது எனக்கு மிகவும் மனநிறைவு அளித்ததாக இருந்தது.
– ஜி.குப்புசாமி
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.