பிரச்சினை என்பது பிரச்சினையில் இல்லை. நாம் அதனைப் பார்க்கும் விதத்தில்தான் உள்ளது. இந்த உலகம் எப்படி இருக்கிறதோ அப்படி நாம் பார்ப்பதில்லை. அது எப்படி இருக்கவேண்டும் என நினைக்கிறோமோ அப்படித்தான் பார்க்கிறோம். இதற்குக் காரணம் நமக்கு இருக்கும் முன்முடிவுகள். நாம் நம்மையும் உலகையும் பார்க்கும் விதத்தில் உள்ள பிழைகளைச் சுட்டிக்காட்டி, நம்மைத் திருத்திக் கொள்ள உதவுவதே இந்நூலின் நோக்கம். எத்தனை பெரிய அறிவாளியாக இருந்தாலும் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தாவிட்டால் அவனது சிந்திக்கும் திறன் பாதித்து விடும். ஆகவேதான், உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் அறிவு என்னும் emotional intelligence மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. அந்த ஏரியாவின் பிஸ்தாவாகிய டேனியல் கோல்மேனின் துணையோடு இதை சுதாகர் கஸ்தூரி தெளிவுபடுத்துகிறார். பல காலமாகச் சொல்லப்பட்டு வரும் தேய்வழக்கு அறிவுரைகளை அதன் பின்புலத்தோடு விளக்கி அவற்றுக்குப் புது ரத்தம் பாய்ச்சி இருக்கிறார் ஆசிரியர். காட்சி ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் என இன்றைய நவீன உலகின் பிரச்சினைகளையும் அவற்றை எவ்வாறு எதிர்கொள்வது என்பதையும் விளக்கி இருப்பது இந்நூலின் தனிச் சிறப்பு. குறுகிய பார்வையை உடைத்தெறிந்து பார்வையை விசாலமாக்கி வாழ்க்கையையும் விசாலமாக்குக்கிறது இந்த நூல்.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.