Description
கடல்சார் வாழ்வை உயிரோட்டமாய்த் தன் படைப்புகளில் தந்திருக்கும் ஜோ டி குருஸ் கடலோரப் பொருளாதாரம் குறித்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். துறைமுகங்களின் உள்கட்டமைப்பு, சரக்குப் போக்குவரத்து, மீன்வளப் பாதுகாப்பு ஆகியவை குறித்த முக்கியமான சிந்தனைகளையும் யோசனைகளையும் முன்வைக்கிறார் ஜோ டி குருஸ். கரைக் கப்பலோட்டம் குறித்தும் விரிவாக விவாதிக்கிறார். இலங்கையுடனான மீனவர் பிரச்சினை, கச்சத்தீவு ஆகியவற்றுக்கான தீர்வுகளையும் முன்வைக்கிறார்.
கடல் சார்ந்த செயல்பாடுகளின் மூலம் இந்தியப் பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்தி, இந்தியக் கடல்வழி வாணிபத்தைச் சர்வதேச அளவில் திறம்பட நடத்துவதற்கான சாத்தியமான யோசனைகள் இந்த நூலில் உள்ளன.
கடல் பகுதியை நம் நாட்டின் கருவூலமாகக் காணும் ஜோ டி குருஸ், அதற்கு ஏற்பட்டுள்ள ஆபத்துகளைப் பற்றியும் எச்சரிக்கிறார்.
கடலையும் கடல் சார்ந்த பொருளாதாரத்தையும் புரிந்து கொள்வதற்கு இந்த நூல் மிகச் சிறந்த பங்காற்றுகிறது.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.