Description
காதல் இன்று வெகுவாக மாறிவிட்டது. காதல் மீதான எதிர்பார்ப்புகள், காதலின் சிக்கல்கள், குழப்பங்கள் வன்முறை முன்பைவிட அதிகரித்துவிட்டன. காதலுக்கும் நட்புக்கும் இடையிலுள்ள அந்த மெல்லிய கோடு அழிந்ததில் பாய் பெஸ்டிகள் எனும் புதிய வகைமை, செக்ஸுடன் கூடிய நட்பு எனும் வினோத உறவு தோன்றியிருக்கிறது. முன்பு காதல் கல்யாணத்தில் கைகூடுவது லட்சியம், இன்று அது ஒரு கனவு. ‘காதலித்துக் கட்டிக்கிட்டோம்’ என்பது விரைவில் ஒரு பூமர் வாக்கியம் ஆகிவிடும். மின்சாரம் பாயும் சொல்லாடலாக இருந்த ‘ஐ லவ் யூ’ இன்று முகமனைப் போல அன்றாடம் சொல்லப்படுகிறது. மிகுதியாக அன்பு காட்டி, சிறிது கூட அதை நம்பத் தயங்குகிறோம். காதல் மிகப்பெரிய நெருக்கடியை சந்திக்கும் இந்த யுகத்தில் காதல் செய்வது எப்படி, வாழ்வின் தத்துவத்துடன் காதலின் தத்துவம் எப்படி பின்னிப் பிணைந்திருக்கிறது எனப் பேசும் நூல் இது.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.