Description
மகால நடுத்தர வர்க்கத்தினரின் மண வாழ்க்கையில் உருவாகும் உறவுச் சிக்கல்களைப் பற்றியவையாக இக்கதைகள் அமைந்திருக்கின்றன. அன்பும் அறனும் கலந்திருக்க வேண்டும் எனக் கருதப்படும் இல்லற வாழ்க்கையில் நஞ்சுக் கொடி சுற்றிய துயரங்கள் பால்நெறிக்கட்டியாகி வலி தருவதை யதார்த்தமாகச் சித்திரிக்கிறார் பாலகுமார் விஜயராமன். குழந்தைப்பேறும் குழந்தையின்மையும் உதிரும் இலையாகவும் துளிர்விடும் தளிராகவும் இக்கதைகளில் மாறிமாறிக் காட்சி தருகின்றன. தங்களுக்கான வாழ்க்கையை வேறு யாரோ வாழ்கிற வேதனையை ஏக்கத்துடன் நினைத்துக்கொள்ளும் கதாபாத்திரங்கள் வருகிறார்கள். பறவைகளின் அலைவுறுதலும் அவற்றின் இருப்பிடமும் இக்கதைகளில் படிமமாக உருப்பெறுகின்றன. உறவுகளுக்கிடையிலான மனம் திறந்த உரையாடல்கள் கடும் வலியினூடே மின்னும் நம்பிக்கைக் கீற்றாக அமைவதையும் இக்கதைகள் அடையாளம் காண்கின்றன. பாலகுமார் விஜயராமின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு இது.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.