Description
நோய் என்பதும் உடலின் ஓர் இயல்பான நிலை என்பதனால் பொறுமையுடன் நோயை அனுபவித்து அதைக் குணப்படுத்திக்கொள்ள உடலுக்கு அவகாசம் அளிப்பதே சிறந்தது என்பது இயற்கை உணவுக் கோட்பாடு. மருந்து உண்ணலாம். ஆனால் அம்மருந்தும் உணவாகவே இருக்க வேண்டும். உணவல்லாத எதையுமே உண்ணலாகாது.
உணவே பெரும்பாலும் மனநிலைகளை உருவாக்குகிறது என்பது இயற்கை உணவுக் கோட்பாட்டின் கொள்கை. நல்ல உணவு அமைதியை அளிக்கும். நல்ல சிந்தனைகளை அளிக்கும். மிதமிஞ்சிய புலன் நாட்டத்தை அளிக்காது. ஆகவே பதற்றமும் வேகமும் உற்சாகமும் சோர்வும் மாறிமாறி வரும் நிலை இருக்காது. இதனால் நரம்பு நோய்கள் ஏற்படுவதில்லை. நல்ல தூக்கமும் நல்ல பசியும் கழிவகற்றமும் நல்ல சிந்தனைகளும் இருந்தால் இயல்பாகவே நல்வாழ்வு அமையும்.
நலமறிதல் புத்தகத்திலிருந்து…
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.