மக்கள் இரு குழுக்களாகப் பிரிந்து கோலிக்குண்டு விளையாடுகிறார்கள். சீட்டுக்கட்டு விளையாடுகிறார்கள். இவற்றைக் காட்டிலும் சுவாரஸ்யமான விளையாட்டு தேவைப்படுகிறது. அரசியல் விளையாட்டு விளையாடலாம் எனத் தீர்மானிக்கிறார்கள்! இந்த விளையாட்டின் விதிகள், போக்குகள், விளைவுகள் என்ன? இந்திய அரசியல் யதார்த்தத்தின் அபத்தம் நாடகக் காட்சிகளினூடே தோற்றம் கொள்கிறது. ஆகிவந்த மதிப்பீடுகளையும் இயல்பாகிவிட்ட சமரசங்களையும் நோக்கிக் கேள்வி எழுப்பும் இந்த நாடகம் அரசியல் அபத்தத்தைத் தோலுரித்துக் காட்டுகிறது. எழுதிப் பல பதிற்றாண்டுகள் கடந்தாலும் இன்றளவும் பொருத்தப்பாடுடைய நாடகம் இது.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.