Description
‘தவளையும் இளவரசியும்’ என்ற சிறுவர் புனைகதையில் வருகின்ற இளவரசி, எப்படி அந்த அசிங்கமான தவளையை முத்தமிட்டு அதை ஓர் அழகான இளவரசனாக மாற்றத் தயங்கினாளோ, அதுபோலவே, நம்முடைய கனவுகள் மெய்ப்படுவதை நம்முடைய தயக்கத்தால் நாமே தடுத்துக் கொண்டிருக்கிறோம். நாம் எவற்றையெல்லாம் அடைவதற்கான திறமை பெற்றுள்ளோமோ, அவற்றை அடைவதிலிருந்து, நம்முடைய எதிர்மறை எண்ணங்களும் உணர்வுகளும் மனப்போக்குகளும் நம்மைத் தடுத்துக் கொண்டிருக்கின்றன. பல வெற்றிப் படைப்புகளுக்குச் சொந்தக்காரரான பிரையன் டிரேசி, தன் மகளும் உளவியல் ஆலோசகருமான கிறிஸ்டினா டிரேசி ஸ்டைனுடன் சேர்ந்து எழுதியுள்ள இந்நூலில் கூறப்பட்டுள்ள, ஆற்றல் வாய்ந்த பல உத்திகளும் பயிற்சிகளும், நீங்கள் எதிர்கொள்கின்ற அனுபவங்கள் முதலில் எவ்வளவு சவாலானவையாகத் தோன்றினாலும்கூட அவை ஒவ்வொன்றிலிருந்தும் பயனுள்ளவற்றைக் கண்டறியக்கூடிய விதத்தில் நீங்கள் உங்களுடைய மனப்போக்கை மாற்றிக் கொள்ள உங்களுக்கு உதவும். அசைக்கப்பட முடியாத தன்னம்பிக்கையை உருவாக்கிக் கொள்வதற்கும், உங்களுடைய மிகச் சிறந்த வடிவமாக நீங்கள் உருவெடுப்பதற்கும், ஓர் அசாதாரணமான வாழ்க்கையை வாழத் தொடங்குவதற்கும் தேவையான அனைத்தையும் இந்நூலிலிருந்து நீங்கள் கற்றுக் கொள்வீர்கள் என்பது உறுதி.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.