கிறித்தவத்திற்குள்ளும் சாதியப் பாகுபாடுகளும் ஏற்றத்தாழ்வுகளும் நிலவுவதையும், இந்து மதத்தில் காலங்காலமாக புரையோடிக் கிடக்கும் தீண்டாமை, ஆதிக்க சாதியினரின் அடக்குமுறைக்கு எதிராக சமத்துவம் நாடி கிறித்தவத்திற்கு மாறியவர்கள் அங்கு படுகின்ற துயரங்களையும் இந்நாவல் தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கின்றது.
ஆதிக்க சாதியினரின் ஆணவப் போக்காலும் சுயநலத்தாலும் வஞ்சிக்கப்படும் ஒடுக்கப்பட்ட தலித் கிறித்தவர்களின் நியாயமான உரிமைகளை போராட்டங்களை அவர்கள் எவ்வாறு உதாசீனப்படுத்துகின்றார்கள், திசை திருப்புகின்றார்கள், போராட்டத்தை சிதைத்து தோற்கடிக்கச் செய்கின்றார்கள் என்பதை மிக இயல்பாக இந்நாவல் பேசுகிறது.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.