Description
விடுதலை, சமத்துவம், பாதுகாப்பு, சொத்துரிமை ஆகியவை மாந்த உரிமைகள். விடுதலை என்பது பிறருக்குத் தீங்கிழைக்காமல் நீங்கள் செய்ய விரும்புவதைச் செய்யும் உரிமை. அனைத்து மனிதர்களும் சட்டத்தால் ஒரே மாதிரி நடத்தப்படுவது சமத்துவம். பாதுகாப்பு என்பது ஒருவர் பிற மனிதருடைய செயல்களின் விளைவுகளில் இருந்து காக்கப்படுதல். சட்டப்படி உங்களுக்கு உரிமையானவற்றை நீங்கள் துய்ப்பதைப் பாதுகாப்பது சொத்துரிமை. இந்த உரிமைகளைத் துய்க்கும் வாய்ப்புப் பெற்றவர்களே குடிமக்கள். இந்த உரிமைகள் போராடித்தான் பெறப்படுகின்றன, உயர்வாக மதிக்கப்படுகின்றன.
ஆனால், சக மனிதர்களை நம் அச்சுறுத்தல்களாக (நமக்கு எதிரானவர்களாக, போட்டியாளர்களாகப்) பார்ப்பதற்கே இவை ஒவ்வொன்றும் நம்மைத் தூண்டுகின்றன என்று கார்ல் மார்க்ஸ் வாதிடுகிறார். இந்த உரிமைகள் நமக்கு வரம்பு வகுக்கின்றன, நம்மைப் பிறரிடமிருந்து பிரிக்கின்றன. தனி மனிதர், குடிமகன் ஆகியோருக்குள்ள உரிமைகள் என்பவை நம் தனிப்பட்ட இருத்தலைத் தக்கவைத்துக்கொள்வதற்கான உரிமைகளே. ஆகவே அவை நாம் ஒவ்வொருவரும் பிறரிடமிருந்து அன்னியப்படுவதை முன்னெடுப்பவையாகவும் வலுப்படுத்தபவையாகவும் அமைகின்றன.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.